நாம் கணினியை எளிதாக பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளம் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. அதில் சில வசதிகளை நாம் தெரிந்து வைத்திருப்போம். பல வசதிகள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
குறுக்கு வழியில் ஒரு செயலை செய்ய கணினியில் நாம் ShortCut Key எனப்படும் வசதியை பயன்படுத்துகிறோம். பைல்கள் அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம்களை கூட நாம் குறுக்கு வழியில் நமக்கு பிடித்தமான shortcut key அமைத்து திறக்கலாம். இந்த வசதியை விண்டோஸ் இயங்குதளம் நமக்கு தருகிறது. நம்மைல் சிலருக்கு இதை பயன்படுத்த தெரிந்திருக்கலாம். பயன்படுத்த தெரியாதவர்களும் கற்றுக்கொள்வதற்காகவே இந்த பதிவு. :)
இந்த வசதியை START -> All Programs'ல் இருக்கும் ப்ரோக்ராம்களுக்கும், desktop'ல் இருக்கும் shortcut பைல்களுக்கும் பட்டுமே பயன்படுத்த முடியும். Windows XP, Windows Vista, Windows 7 ஆகிய இயங்குதளங்களில் இதை பயன்படுத்தும் வசதி உள்ளது.
இப்போ எப்படி இந்த வசதியை பயன்படுத்துவது என பார்க்கலாம்.
அப்ளிகேஷன்களுக்கு(சாப்ட்வேர்) shortcut key பயன்படுத்தும் முறை:
1.Start Menu-வை திறக்கவும்.
2.ALL PROGRAMS திறந்து, எந்த அப்ளிகேசனுக்கு shortcut key கொடுக்க வேண்டுமோ, அதன் மீது RIGHT CLICK செய்து “Properties” திறக்கவும்.
3.இப்பொழுது ஒரு box திறக்கும்.
4.அதில “Shortcut key” என்ற ஒரு லேபல் இருக்கும். அதன் அருகில் இருக்கும் box'ல், எந்த shortcut key கொடுக்க வேண்டுமோ அந்த key’யை எழுதவும். எடுத்துக்காட்டாக நீங்கள் "A" என்ற key’யை பயன்படுத்த விரும்பினால், "A" என எழுதவும். உடனே அதில் தானாக Ctrl + Alt +A என வந்துவிடும். இப்பொழுது Apply பட்டனை அழுத்தி save செய்து கொள்ளவும்.
இனி நீங்கள் எப்பொழுது Ctrl + Alt +A அழுத்தினாலும் குறிப்பிட்ட அந்த அப்ளிகேசன் சாப்ட்வேர் திறந்துவிடும்.
போல்டர் மற்றும் பைல்களுக்கு பயன்படுத்தும் முறை:
1.எந்த பைல் அல்லது போல்டர் திறக்க வேண்டுமோ, அதன் மேல் RIGHT CLICK செய்து, Send to -> Desktop(Create Shortcut) கொடுக்கவும்.
2.இப்பொழுது அந்த பைல் அல்லது போல்டர் Desktop'ல் வந்துவிடும்.
3.Desktop’ல் இருக்கும் அந்த போல்டர் அல்லது பைல் மீது RIGHT CLICK செய்து “Properties” திறக்கவும்.
4.இப்பொழுது ஒரு box திறக்கும்.
5.அதில “Shortcut key” என்ற ஒரு லேபல் இருக்கும். அதன் அருகில் இருக்கும் box'ல், எந்த shortcut key கொடுக்க வேண்டுமோ அந்த key’யை எழுதவும். எடுத்துக்காட்டாக நீங்கள் "B" என்ற key’யை பயன்படுத்த விரும்பினால், "B" என எழுதவும். உடனே அதில் தானாக Ctrl + Alt +B என வந்துவிடும். இப்பொழுது Apply பட்டனை அழுத்தி save செய்து கொள்ளவும்.
இனி நீங்கள் எப்பொழுது Ctrl + Alt +B அழுத்தினாலும் குறிப்பிட்ட அந்த பைல் அல்லது போல்டர் திறந்துவிடும்.
இனிமே ஷார்ட்கட் கீ பயன்படுத்தி கலக்குங்க... :)
0 comments:
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்