பல இணையதளங்கள் மின்னஞ்சல் வசதியை அளித்தாலும், நம்மில் பலரும் பயன்படுத்துவது கூகுளின் ஜிமெயில் சேவையையே. அதற்கு முக்கியமான காரணம் ஜிமெயில் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.
நான் இப்பொழுது நம்மில் பலருக்கு தெரியாத, ஜிமெயிலின் இரு முக்கியமான வசதிகளை பற்றி சொல்ல போகிறேன்.
1.MUTE வசதி:
பெரும்பாலான இணையதளங்களில் இணைவதற்கு நமது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டியிருக்கும். அன்றிலிருந்து ஆரம்பித்துவிடும் தொல்லை. தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கும். அதுவும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் என்றால் சொல்லவே
தேவையில்லை. Delete செய்வதற்குள் உயிரே போய்விடும். UNSUBSCRIBE செய்யலாம் என நினைத்தால், பாதி மெயில்களில் அதற்கான லிங்கே இருக்காது :(
இதுபோன்ற தொந்தரவிலிருந்து விடுபடவே ஜிமெயில் ஒரு அற்புதமான வசதியை தருகிறது. உங்களுக்கு தொந்தரவு தரகூடிய மெயிலை திறக்கவும். அதில் MORE ACTION -> MUTE கொடுக்கவும். தொந்தரவு போயேபோச்சு :)
2.தேடல்:
உங்கள் inbox’ல் ஏராளமான மெயில்கள் இருக்கும். அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட மெயிலை தேட நாம் ஜிமெயிலில் இருக்கும் search வசதியை பயன்படுத்துவோம். ஆனால் search option பயன்படுத்துவதன் மூலம் துல்லியமான தேடல் முடிவுகளை பெறலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். உங்களூக்கு தேட வேண்டிய மெயில் பற்றி எதுவெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ, அதை எல்லாம் குறிப்பிட்டு தேடுங்கள். துல்லியமான தேடல் முடிவு கிடைக்கும்.
இனிமே ஜிமெயிலில் கலக்குங்கோ... :)
1 comments:
நன்றி
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்