இணைய உலகில் இன்று சமூக வலைதளங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணையதளத்தில் இருவர் பேசிக்கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனால் இன்று நிலமை வேறு. பெரும்பான்மையோர் ச்மூக இணையதளங்களே தஞ்சமென்று கிடக்கின்றனர்.
ச்மூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணையதளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்துவதற்காகதான் என்றாகிவிட்டது. சிலர் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம் :)
சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன், வேலைக்கு விண்ணப்பித்தவரை பற்றி உண்மையாக, முழுமையாக தெரிந்துகொள்ளும் நோக்கில் அவரின் பேஸ்புக் புரொபைலை பார்க்கின்றனர். இப்பொழுதெல்லாம் பெண்ணுக்கு மாப்பிளை
/மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போதுகூட சிலர் இதையே பின்பற்றுகின்றனர்.
இப்படி குறிப்பிட்ட ஒருவரின் போஸ்ட்களை அவரின் புரொபைலில் சென்று தேடிப்பிடித்து படிப்பது சற்று சிரமமாகவே இருந்துவந்தது. அந்த சிரமத்தை போக்க வந்துள்ள இணையதளமே FB TIME MACHINE. இதன் இணையதள முகவரி
http://fbtimemachine.appspot.com
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணையதளத்திற்கு சென்று, உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து கொள்ள வேண்டும். திறந்த பின்பு எந்த நண்பரின் அனைத்து பதிவுகளையும் படிக்கவேண்டுமோ, அவரின் பெயரை குறிப்பிடவும். உடனே அவரின் “அனைத்து” பதிவுகளையும் காட்டும். இது பேஸ்புக் பிரியர்களுக்கும், பேஸ்புக் பயன்படுத்தும் “குறிப்பிட்ட ஒருவரை” பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பயன்படும் ஒரு இணையதளம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
விரைவில் இன்னொரு பேஸ்புக் டிப்ஸோடு சந்திக்கிறேன் :)
1 comments:
really excellent message
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்