இப்பொதெல்லாம் பாஸ்வேர்டு திருடுவது ரொம்ப சாதாரணமாகிவிட்டது. இங்கு வலையுலகத்தில் சிலரின் பதிவுகளில் கூட சமீபத்தில் பார்த்தேன். தனது Blogger அல்லது Email பாஸ்வேர்டை கூட யாரோ திருடிவிட்டார்கள் என எழுதியிருந்தார்கள். நமது பாஸ்வேர்டு திருடப்படுவதற்கு நாமும் சிலசமங்களில் காரணமாகிவிடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
பாதுகாப்பான பாஸ்வேர்டு அமைப்பதற்கு சில டிப்ஸ்:
1. பொதுவாக பயன்படுத்தபடும் பாஸ்வேர்டை பயன்படுத்தாதீர்.
2. உங்கள் பாஸ்வேர்ட் உங்கள் பெயரிலோ, உங்களுக்கு பிடித்தமான மற்றவர்களின் பெயரிலோ இருக்க வேண்டாம்.
3. உங்களது மொபைல் எண், பிடித்த விடயங்கள் இவைகளாக
கூட உங்கள் பாஸ்வேர்ட் இருக்க கூடாது.
4. பாஸ்வேர்டில் ஆங்கில எழுத்துக்கள் பெரியது மற்றும் சிறியது, எண்கள் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள். Symbols($,% Etc...) கலந்து பயன்படுத்துவது கூடுதல் நலம்.
5. பாஸ்வேர்ட்டில்’S' -க்கு பதிலாக ‘$’ மற்றும் ‘O'-க்கு பதிலாக ‘0’(பூஜ்ஜியம்) பயன்படுத்தலாம்.
சரி இப்பொழுது மேட்டருக்கு வருவோம். உங்கள் பாஸ்வேர்ட் எவ்வளவு பாதுகாப்பானது என தெர்ந்துகொள்வதெப்படி?
கவலையே வேண்டாம். இருக்கவே இருக்கு அதற்கென ஒரு இணையதளம். இந்த இணைய தளைத்தில் உங்கள் பாஸ்வேர்டை கொடுத்தால், அந்த பாஸ்வேர்டை திருடுவதற்கு எவ்வளவு நாட்கள்(நேரம்) ஆகும் என்பதை காட்டும்.
அந்த இணையதள முகவரி http://www.howsecureismypassword.net
இந்த முகவரியில் போய் பாருங்கள். உங்கள் பாஸ்வேர்டை Hackers திருட எவ்வளவு காலமாகும் என்பதை சொல்லும். உங்கள் பாஸ்வேர்டை இந்த இணையதளத்தில் சோதித்து பார்க்க பயப்பட தேவையில்லை. இந்த இணையதளம் உங்கள் பாஸ்வேர்டை சேமித்து வைக்காது.
பாஸ்வேர்டின் வகைகள், எப்படி பாஸ்வேர்ட் அமைக்க கூடாது. எப்படி அமைக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக விரிவான ஒரு இன்னொரு பதிவு விரைவிலே போடுகிறேன்.
உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பான பாஸ்வேர்டாக அமைய வாழ்த்துக்கள். :)
0 comments:
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்