எல்லாருக்கும் மறுபடியும் ஒரு வணக்கம் ! :)
இன்றைய பதிவில் நான் உங்களுக்கு ஒரு அருமையான மென்பொருளை பற்றி சொல்ல போகிறேன்.
இரவு நேரம் ஒரு பெரிய file தரவிறக்கம் செய்துகொண்டிருப்பீர்கள். தரவிறக்கம் முடிவதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்து கணினியை யாரவது shutdown செய்து வைப்பார்களானால் தூங்கியிருக்கலாமே என்று நினைப்போம் நாம். தரவிறக்கம் முடியும் வரை விழித்துக்கொண்டிருப்போம்.
இந்த குறையை போக்க வந்ததுதான் இந்த அருமையான PShutDown மென்பொருள்.
இந்த மென்பொருள் வெறும் 1 MB அளவு கொண்டது. இதை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டால், நாம் குறிப்பிடும் நேரத்திற்கோ, குறிப்பிடும் நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்போ பின்வருவனவற்றை செய்கிறது.
1.கணினி shotdown
2.கணினியை ரீஸ்டார்ட் செய்யும்.
3.கணினி திரையை அணைக்கும்.
4.செய்தியை காண்பிக்கும்.
5.மென்பொருளை ஓட விடும்.
6.லாக் ஆஃப் ஆகும்.
7.அலாரம் அடிக்கும்
இது போன்றவற்றை நாம் குறிப்பிடும் நேரத்தில் தானாக செய்கிறது. இந்த அற்புதமான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
Happy Downloading :)
1 comments:
thanks for sharing
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்