உங்கள் கணினியின் ஸ்பேஸ்(SPACE) பெருமளவில் குறைந்து போவதற்க்கான முக்கியமான காரணம் உங்கள் கணினியில் தேவையற்ற கோப்புகள் இருப்பதுதான் காரணம். அதிலும் குறிப்பாக போட்டோக்கள். ஒரே போட்டோவை ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நாம் சேமித்து வைத்திருந்தால் அவற்றை கண்டுபிடித்து Delete செய்வது கடினமான வேலையாகிவிடுகிறது.
ஒன்றிற்கு மேற்பட்டமுறை சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களை கண்டறிந்து நம் அனுமதியுடன் அழித்துவிடுவதற்கு ஒரு கருவி இருந்தால் எப்படியிருக்கும் என நினைப்பவர்களுக்காகதான் இந்த மென்பொருள்.
”டுயுப்ளிகேட் பைண்டர்” எனப்படும் இந்த மென்பொருள் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட முறை சேமித்து வைத்திருக்கும் போட்டோ அல்லது அத ஒத்த அமைப்புடைய போட்டோக்களை தெரிந்துகொள்ளலாம். நாம் அந்த புகைப்படங்களை அழிக்க நினைத்தால் இந்த மென்பொருள் உதவியுடன் அழித்துவிடலாம்.
பயன்படுத்த மிக எளிதான இந்த மென்பொருள், JPG, BMP, GIF, PNG ஆகிய பார்மெட் படங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ள, கீழே இருக்கும் தரவிறக்க பட்டனை அழுத்தவும்
நன்றி !!! :)
3 comments:
கண்டிப்பாக இது ரொம்ப நல்லா இருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஒ
நண்பரே இன்று தான் நான் உங்களின் தளத்தை கண்டேன். கண்டதும் உங்கள் தகவல்கள் என்னை மெய் சிலிற்கச் செய்தன. பதிவு அற்புதம்.
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்